site logo
நமது இதயவேந்தன் சிவாஜி மன்றம் மற்றும் க்ரூப்ஸ் ஆஃப் கர்ணன் மன்றம் சார்பாக நேற்று மாலை 07.02.2018 சென்னை காஸினோ திரையரங்க வளாகத்தில் நடிகர் திலகத்தின் உத்ததம புத்திரன் திரைப்படத்தின் வைர விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. கொடை வள்ளல் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் ரசிகர்கள் சார்பாக புரசை திரு லாரனஸ் அவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க்ப்ப்ட்டது. மேலும் திரு வானிலா விஜயகுமாரன் அவர்களின் தயாரிப்பில் உருவான நடிகர் திலகத்தின் நிழற்படங்கள் அடங்கிய இரு அட்டகாசமான காலண்டர்களும் வெளியிடப்பட்டன. வந்திருந்தவர்களுக்கு இனிப்பு மற்றும் காரம் காஃபி ஆகியவை வழங்கப்பட்டன. தலைவரின் பக்தர் திரு சிவாஜி ரவி அவர்கள் நிதியுதவி வழங்கி சிறப்பித்தார். விழாவில் திரளான ரசிகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
விழாவில் நடிகர் திலகத்தின் கொடைத்தன்மை, மற்றும் நிதியுதவி அளிப்பதற்கான காரணம், உத்தமபுத்திரன் திரைப்படத்தைப் பற்றிய நினைவூட்டல் போன்றவற்றை நண்பர்கள் கணேசன், நாஞ்சில் இன்பா ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். இரவு சுமார் 7.30 மணி யளவில் நிகழ்ச்சி நிறைவுற்றது.
 
 
 

Site update in progress. Some links may not be active. To resume soon

 
`