மறுவெளியீடுகளும் மன்னரின் சாதனைகளும்

 
  தமிழகமெங்கும் மறு வெளியீடு காணும் நடிகர் திலகத்தின் திரைப்படங்களைப் பற்றிய தகவல்கள் இங்கு இடம் பெறும்  
     
  நடிகர் திலகத்தின் உன்னதத் திரைக்காவியங்களில் ஒன்றான ராஜபார்ட் ரங்கதுரை எண்ணியல் பிரதியாக விரைவில் தமிழகமெங்கும் வெளியிடப்பட உள்ளது. இதைப்பற்றிய விளம்பரம் 17.09.2015 தினத்தந்தி நாளிதழில் வெளியாகி உள்ளது. இதன் நிழற்படம் நம் பார்வைக்கு.  
   
     
   
   
   
 

Kattabomman to roar again ... Read the article in the Hindu dated 31.07.2015. Click the image above for the Hindu website page.

 
     
  30.05.2015 முதல் திருச்சி கெயிட்டி திரையரங்கில் என்னைப் போல் ஒருவன் திரையிடப்பட்டு அரங்கு நிறைந்த காட்சிகளுடன் வெற்றி நடை போட்டுள்ளது. 31.05.2015 அன்று மாலைக் காட்சி ரசிகர்களின் சிறப்புக் காட்சியாக அரங்கு நிறைவு கண்டு பலத்த ஆரவாரத்துடன் நடைபெற்றது. அரங்கின் வெளியிலும் உள்ளும் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் ஆரவாரங்கள்.. நிழற்படத்தொகுப்பு. நன்றி, திரு ராமச்சந்திரன் மற்றும் திரு அண்ணாதுரை, சிறப்பு அழைப்பாளர், அகில இந்திய சிவாஜி மன்றம்.  
     
   
     
  இது பற்றி நாளிதழகளின் திருச்சி பதிப்பில் வெளிவந்துள்ள செய்திகளின் நிழற்படங்கள் -  
   
   
   
     
  04.05.2015 - வசந்தமாளிகை மறுவெளியீடு பற்றி இன்றைய மாலைமுரசு திருச்சி பதிப்பில் வெளிவந்துள்ள செய்திக்குறிப்பு ...   
   
  திருச்சியில் சமீபத்தில் வசந்தமாளிகையின் வெற்றி உலா பற்றிய செய்திகளை ஊடகங்களுக்கு கொண்டு சென்று நடிகர் திலகத்தின் தாக்கத்தை உலகறியச் செய்த திரு அண்ணாதுரை அவர்களுக்கு நமது உளமார்ந்த பாராட்டுக்கள்.  
     
  03.05.2015 தினத்தந்தி நாளிதழில் வெளிவந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் விளம்பரத்தின் நிழற்படம்  
   
     
 

ஏப்ரல் 2015 - திருச்சி கெயிட்டி -

 
 

வசந்த மாளிகை

 
  ஏப்ரல் 24, 2015 முதல் திருச்சி கெயிட்டி திரையரங்கில் திரையிடப்பட்ட வசந்த மாளிகை, மிகப் பெரிய வெற்றியைப் பெற்று அரங்கு நிறைவு கண்டுள்ளது. திருச்சி கெயிட்டி திரையரங்கில் ரசிகர்களின் கோலாகலம் ஞாயிறு 26.04.2015 மாலை அமர்க்களமாய் நடைபெற்றது.  
   
   
   
   
   
   
   
   
   
   
  மேற்காணும் நிழற்படங்கள் மய்யம் இணையதளத்தில் நண்பர் ராமச்சந்திரன் தரவேற்றி அவ்விணைப்பின் மூலம் இங்கு இடம் பெற்றுள்ளன. அவருக்கு நமது இணையதளம் சார்பி்ல் நன்றி.  
     
 

ஏப்ரல் 2015 - மதுரை சென்ட்ரல்-

 
 

பாவமன்னிப்பு

 
     
 

ஏப்ரல் 24, 2015 முதல் மதுரை சென்டரல் திரையரங்கில் தினசரி 4 காட்சிகளாக வெற்றி நடை போடுகிறது...