சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் 08.03.2013 மதியம் 2 மணி யளவில் வசந்த மாளிகை வெளியீட்டினை யொட்டி இதயராஜா மற்றும் குரூப்ஸ் ஆப் கர்ணன் அமைப்புகள் சார்பில் அன்னதானம் நடைபெற்றது. திரு கணேசன் வரவேற்க, அகில இந்திய ரசிகர் மன்றத் தலைவர் திரு கே.வி.பி.பூமிநாதன் அவர்கள் அன்னதான நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இது மேலும் சில திரையரங்குகளில் நடைபெற உள்ளது. இப்போது நிகழ்ச்சியிலிருந்து சில நிழற்படங்கள்.
திரு கணேசன் வரவேற்புரை
பேனரை ஒட்டி நிற்பவர் திரு கணேசன்
திரு பூமிநாதன் அவர்கள் அன்னதானத்தைத் துவக்கி வைக்கிறார்
கதாசிரியர் மற்றும் வசனகர்த்தா பாலமுருகன் அவர்கள் 'வசந்த மளிகை' பற்றியும் நடிகர் திலகத்துடனான தன் அற்புத அனுபவங்களைப் பற்றியும் சொல்வதைக் கேளுங்கள்.
மேற்காணும் நிழற்படம் உபயம் திரு நெய்வேலி வாசுதேவன்