site logo  
   
   
 

அகில இந்திய சிவாஜி மன்றம்

#25, பெசன்ட் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-600014
கைப்பேசி - 9382823627 மின்னஞ்சல் முகவரி -

sivajirasikarmandram@gmail.com

 

இதய தெய்வம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் 87வது பிறந்த நாள் 01.10.2015

1.10.2015 அன்று மாலை சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 87வது பிறந்த நாள் விழாவில் விருது பெற்றவர்களுடன் நடிகர் திலகத்தின் குடும்பத்தினர். இவ்விழாவினைத் தொடர்ந்து நடத்துவதற்கு தங்கள் குடும்பத்தில் அடுத்த தலைமுறை தயாராகி வருவதாகவும் அடுத்த ஆண்டில் அவர்கள் இதை முன்னின்று நடத்தக்கூடும் என்றும் விழாவில் பிரபு அறிவித்தார்.

அமர்ந்திருப்போர் - இடமிருந்து வலமாக

திருமதி ஊர்வசி சாரதா, திரு எஸ்பி. முத்துராமன், செல்வி குசலகுமாரி, திரு எம்.சி.சேகர், திரு டைபிஸ்ட் கோபு, திருமதி எம்.எஸ்.ராஜேஸ்வரி

நின்றிருப்போர் - இடமிருந்து வலமாக

நடிகர் திலகம் விருது பெற்ற மூத்த ரசிகர்கள் திரு மா. நடராஜ், திரு டி.வி.சந்திரசேகர், திரு ராம்குமார், திரு சீதாராமன், திரு பிரபு, இவர்களுடன் திரு துஷ்யந்த் ராம்குமார், திரு விக்ரம் பிரபு மற்றும் ராம்குமாரின் மற்ற இரு புதல்வர்கள், கிரி சண்முகம் அவர்களின் புதல்வர்.

நன்றி - http://www.tamilcinemaz.com/nadigar-...ion-stills024/
 
நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு 26 08 2015
 
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கும் சிவாஜி கணேசன் சொந்தமானவர் 26 08 2015
 

தங்கள் பகுதியில் நடைபெற்ற நடிகர் திலகம் பிறந்த நாள் விழா / நினைவு நாள் அனுசரிப்பு பற்றிய செய்திகளையும் நிழற்படங்களையும் கீழ்க்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

sivajirasikarmandram@gmail.com
 

அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவர் அன்புச் சகோதரர் ராம்குமார் கணேசன் அவர்களின் பிறந்த நாள் விழா

அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவரும் மக்கள் தலைவர் சிவாஜியின் அருந்தவப் புதல்வருமான அன்புச் சகோதரர் ராம்குமார் அவர்களின் பிறந்த நாளை, மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அன்னை இல்லத்தில் கொண்டாடினர். நிகழ்ச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் டிஜிட்டல் வெளியீட்டினையொட்டி சிறப்பு மலர் ஒன்றினை திரு எஸ்.கே.விஜயன் அவர்கள் தொகுத்துள்ளார். இம்மலரினை திரு ராம்குமார் கணேசன் அவர்கள் அப்போது வெளியிட மாநில நிர்வாகி திரு முருகவிலாஸ் கே.நாகராஜன் அவர்கள் பெற்றுக்கொண்டார். மேலும் நிழற்படங்களுக்கான இணைப்பு கீழே உள்ள படத்தில் தரப்பட்டுள்ளது.
 
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திரையுலக சாதனைகளை மட்டுமின்றி, அதையும் தாண்டி இந்நாட்டிற்கு அவருடைய பங்களிப்பை பெருமளவில் மக்களிடம் சென்று சேர்த்தது சிவாஜி மன்றம்
 
அமைப்பு ரீதியாக ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து அவற்றின் மூலம் தமிழக அரசியலில் தேசீய நீரோட்டத்தை ஆழமாக வேரூன்றச் செய்த பெருமை சிவாஜி மன்றத்தற்கு மட்டுமே உண்டு. அது மட்டுமல்ல மன்றங்களை நாட்டு மக்கட்பணியில் ஈடுபடச்செய்து அர்ப்பணித்ததில் முதன்மையானதும் சிவாஜி மன்றம் மட்டுமே.
 
கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்புற இயங்கி வரும் அகில இந்திய சிவாஜி மன்றம் அமைப்பு ரீதியாக முதலில் திரு சின்ன. அண்ணாமலை அவர்கள் தலைமையில் இயங்கத் தொடங்கியது. அவருக்குப் பின்னர் திரு தளபதி சண்முகம் அவர்களின் தலைமையிலும் அவருக்குப் பின்னர் திரு கே.வி.பி.பூமிநாதன் அவர்கள் தலைமையிலும் தொடர்ந்தது.
 

வெற்றிப்பாதையில், சாதனைப் பயணத்தைத் தொடர்ந்து வரும் அகில இந்திய சிவாஜி மன்றத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நமது அன்புச் சகோதரர் தளபதி ராம்குமார் அவர்களுக்கு நம் இணைய தளம் சார்பில் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள். மேலும் நடிகர் திலகத்தின் புகழ் பாடுவதில் இவ்விணையதளம் ஆற்றி வரும் பங்கினை அங்கீகரித்து அதிகாரபூர்வமான இணையதளமாக அறிவித்துள்ளதற்கு நமது இணையதளம் சார்பில் மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, அகில இந்திய சிவாஜி மன்றத்தின் குரலாக, நமது அன்புச் சகோதரர் ராம்குமார் அவர்கள் தலைமையை ஏற்று நடிகர் திலகத்தின் புகழ் பாடுவதில் தொடர்ந்து செயல்படுவதற்கும் இவ்விணைய தளம் சார்பில் நம் உறுதியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 
14.02.2015 சனிக்கிழமை காலை 10.31 மணிக்கு சென்னை-4, மயிலாப்பூர், தெற்கு மாட வீதி, எண் 41ல் அமைந்துள்ள வசந்த பவன் A/C ஹாலில் நடைபெற்ற அகில இந்திய சிவாஜி மன்ற நிர்வாகிகள் / சிறப்பு அழைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர் G. ராம்குமார் அவர்கள் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
 
1. தேசீயமும், தெய்வீகமும் ஒன்று என்ற நடிகர் திலகத்தின் உயிர் நாடிக் கொள்கையை மக்களுக்கு எடுத்துச் சொல்வது.
 
2. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய இடங்களில் உள்ள தெருக்கள், பூங்காக்கள் ஆகியவற்றிற்கு நடிகர் திலகத்தின் பெயரைச் சூட்ட முயற்சி செய்ய வேண்டும்.
 
3. மாவட்டத் தலைநகர், மாநகராட்சி மற்றும் தாலுகா தலைநகர் ஆகிய இடங்களில் முடிந்த வரையில், தனியார் இடங்களைப் பெற்று நடிகர் திலகத்தின் முழு உருவச்சிலையை வைக்க முயற்சிகள் மேற்கொள்ள  வேண்டும். சிற்றூர்களைப் பொறுத்த வரையில் முடிந்தவரை நடிகர் திலகத்தின் மார்பளவு சிலையை வைக்கவாவது ஏற்பாடு செய்ய வேண்டும்.
 
4. தற்போது நடிகர் திலகத்தின் சிலை இருக்கும் தஞ்சாவூர், மதுரை மற்றும் பிற இடங்களில் உள்ள சிலையை புதுப்பித்து நல்ல முறையில் இருக்கும்படியாக தொடர்ந்து பராமரித்து வர ஆவன செய்ய வேண்டும்.
 
5. நடிகர் திலகம் பிறந்த அக்டோபர் முதல் தேதியன்று, ஆலயங்கள், அனாதை இல்லங்கள் போன்ற இடங்களில் வைப்புத் தொகையை செலுத்தியோ, அல்லது அன்றைய ஒரு தினத்திற்கான செலவை ஏற்றுக்கொண்டோ அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்தல்.
 
6. முடிந்தவரையில், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும், பிற மாநிலங்கள், பிற நாடுகள் ஆகியவற்றிலும் நடிகர் திலகத்தின் மன்றங்களை திறக்கச் செய்து – ஏதோ ஒரு காரணத்தால் ஒதுங்கி இருக்கும் முந்நாள், இந்நாள் ரசிகர்களை ஒருங்கிணைத்து புதிய வேகத்துடன் செயல்படச்செய்வது.
 
7. காலத்தை வென்று நிற்கும் நடிகர் திலகத்தின் அனைத்துப் படங்களையும், நவீன தொழில் நுட்பம் மூலம் ஆவணங்களாக மாற்றி – எல்லோரும் பார்த்துப் பயன் பெற்று வருங்கால சந்ததியினரும் கண்டுகளிக்கும் விதமாக ஆவணக்காப்பகம் ஒன்றை ஏற்படுத்துதல்.
 
8. சென்னையில் இருக்கும் ரஷ்ய கலாச்சார மையத்தில் அமையவிருக்கும் திரைப்பட ஆவணப்பகுதியில். நடிகர் திலகத்தின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக ஒரு தனிப்பகுதியை அமைத்து மாணவர்கள் பயன்பெற ஆவன செய்து வரும், அம்மையத்தின் செயலாளர் திரு தங்கப்பன் அவர்களைப் பாராட்டுவதுடன், அவருக்கு உறுதுணையாக இருந்து வேண்டுவன செய்து கொடுத்தல்.
 
9. தமிழகமெங்கும் இருக்கும் நடிகர் திலகத்தின் முக்கியமான போட்டோக்கள், செய்திகள், விவரங்கள் ஆகியவை இடம் பெற்றிருக்கும் பத்திரிகைகள், புத்தகங்கள் ஆகியவற்றைத் தேடிக் கண்டுபிடித்து அமையவிருக்கும் ஆவணக் காப்பகத்தில் பாதுகாத்தல்.
 
10. அகில இந்திய சிவாஜி மன்றங்களின் செயல்பாடுகளையும், நடிகர் திலகம் பற்றிய பெருமைமிகு சாதனைகளையும் உலகம் முழுவதும் எடுத்துச்செல்லும் விதமாக, நடிகர் திலகம் டாட்காம், இளையதிலகம் பிரபு டாட்காம் ஆகிய இணையதளங்களை நடத்திவரும் திரு வி.ராகவேந்திரன், மற்றும் திரு டி.முரளி ஆகியோருக்கு உறுதுணையாக இருத்தல்.
 
 
 
 

அகில இந்திய சிவாஜி மன்றம்

புதிய நிர்வாகிகள் பட்டியல்
     
தலைவர்  

தளபதி G. ராம்குமார்

பொதுச்செயலாளர்   C.S. குமார்
இணைப் பொதுச்செயலாளர்   முருகவிலாஸ் K. நாகராஜன்
பொருளாளர்   S. முத்தையா
காப்பாளர்   A. அருணன்
     
துணைத்தலைவர்கள்   செயலாளர்கள்
     
1. K.V. நாகமணி (விருதுநகர்)   1. M.A. மஸ்தான் (சென்னை)
2. T. சீனிவாசன் (திருச்சி)   2. G.K. பிரசன்ன குமார் (திருப்பூர்)
3. தாம்பரம் C. தியாகராஜன் (சென்னை)   3. N. கோலப்பன் (கன்னியாகுமாரி)
4. A. ஜெயவேலு (காஞ்சீபுரம்)   4. ஓம் சக்தி ரமேஷ் (புதுச்சேரி)
5. G. செல்வம் (புதுச்சேரி)   5. V. இளங்கோவன் (ஆந்திரா்)
6. V.K. சண்முகம் (ஆந்திரா்)   6. G. ரவி (கர்நாடகா)
7. N. தேவராஜ் (கர்நாடகா)    
     
வலைத்தளம்   V. ராகவேந்திரன், T. முரளி
சட்ட ஆலோசகர்   T. சிவஞான சம்பந்தன்
மகளிர் அணி அமைப்பாளர்   திருமதி இராணி பெரியசாமி
ஆவணக் காப்பாளர்   செல்வி S. கிரிஜா
     
மாநில தலைவர்கள்
     
புதுச்சேரி   G. மாயன்
ஆந்திரா   P.M. ராஜா
கர்நாடகா   K. செல்வகுமார்
மஹாராஷ்ட்ரா   Dr. மூர்த்தி S. பிள்ளை
     
மாவட்டத் தலைவர்கள்   சிறப்பு அழைப்பாளர்கள்
     
1. வடசென்னை - சிவாஜி V. மகாலிங்கம்   1. Prof. T.S. நாராயணசாமி (சென்னை)
2. மத்திய சென்னை - N. கேசவன்   2. S. இசக்கி பாண்டியன் (சென்னை)
3. தென்சென்னை - C.K. மணவாளன்   3. K.V.S. மருதுமோகன் (சென்னை)
4. காஞ்சீபுரம் மேற்கு - P.R. இராம மூர்த்தி   4. P. தங்கப்பன் (சென்னை)
5. திருவள்ளூர் - I. தாயுமானவன்   5. Dr. K.M. ராதாகிருஷ்ணன் (சென்னை)
6. வேலூர் கிழக்கு - சிவாஜி V. ரவி   6. Prof. V. பாலசுப்ரமணியம் (தஞ்சாவூர்)
7. வேலூர் மேற்கு -A. சிவாஜி சீனிவாசன்   7. K.M. மதிவாணன் (குமாரபாளையம்)
8. கிருஷ்ணகிரி - E. சையத் நாசர்   8. S.A. திருப்பதி ராஜா (ராஜபாளையம்)
9. தருமபுரி - M. ஜெயராஜ்   9. K. விஜயசிங்கம் (மலேசியா)
10. சேலம் - B. டில்லி சேகர்   10. G. நந்தகுமார், நடிகர் (சென்னை)
11. திருப்பூர் - அரிமா R. சத்ருக்கன்   11. N. சீனிவாசன் (சென்னை)
12. ஈரோடு - T. கண்ணப்பன்   12. T.V. சந்திரசேகரன் (சென்னை)
13. நாமக்கல் - பெரியூர் M. சந்திரசேகர்   13. டி. சுயம்பு (சென்னை)
14. கோவை நகர் - B. சிவாஜி சேகர்   14. திருமதி S. புவனேஷ்வரி (சென்னை)
15. கோவை புறநகர் - S. வெற்றிவேல்   15. M. தங்கவேலு (புதுச்சேரி)
16. திருவண்ணாமலை - D. முருகேசன்   16. டாக்டர் H. செல்லப்பன் (பட்டுக்கோட்டை)
17. விழுப்புரம் - S. ஆறுமுகம்   17. அரிமா N. தனபால் (கள்ளக்குறிச்சி)
18. கடலூர் - S. ராமச்சந்திரன்   18. MAA. தனராஜ் (பெங்களூரு)
19. அரியலூர் - க. ஆதிமூலம்   19. K.J. குமார் (நகிரி)
20. திருச்சி நகர் -N. சண்முகம்   20. பி.முகமது உஸ்மான் (கிருஷ்ணகிரி)
21. திருச்சி புறநகர் - உறந்தை S. செல்வம்   21. C. முத்து சரவணன் எம்.ஏ., எம்.எல். (மதுரை)
22. தஞ்சாவூர் வடக்கு - K. பாஸ்கரன்   22. P. ராஜேந்திரன் (மதுரை கோச்சடை)
23. தஞ்சாவூர் தெற்கு - K.M. நேரு   23. P. இருளாண்டி (எ) ராஜா (மதுரை கோச்சடை)
24. கரூர் - T. பாபு   24. S. அண்ணாதுரை (திருச்சி)
25. திண்டுக்கல் கிழக்கு -A. திருப்பதி   25. Dr. K.S. சுதர்சனம், M.V.Sc. (காஞ்சீபுரம்)
26. திண்டுக்கல் மேற்கு - K. முத்து விஜயன்   26. A. பாண்டியன் (திண்டுக்கல்)
27. புதுக்கோட்டை- M. நாகூர் கனி   27. S. ராஜேந்திரன் (கடலூர்)
28. சிவகங்கை - T.R. கண்ணன் ரகுபதி   28. முனைவர் வைத்தியலிங்கம் (மும்பாய்)
29. ராமநாதபுரம் - N. பால்ராஜ்   29. V. சந்திரசேகரன் (பர்மா)
30. மதுரை நகர் - K. ஜோதி பாஸ்கர்   30. V.C.S. விஜய் கணேஷ் (பர்மா)
31. மதுரை புறநகர் - புதுப்பட்டி M. செல்வராஜ்   31. N. ராம் சுந்தர் (பிரபு மன்றம்)
32. விருதுநகர் - S.P. சிவாஜி ராஜேந்திரன்   32. A.R. சந்திரசேகர் (விக்ரம் பிரபு மன்றம்)
33. திருநெல்வேலி - B. சிவாஜி செல்வராஜன்   33. S. குமரேசன் (பெங்களூரு)
34. தூத்துக்குடி - P. M. எட்வின் பானு    
35. கன்யாகுமரி - S. பெஞ்சமின் போஸ்    
     
செயற்குழு உறுப்பினர்கள்
     
1. R.S. சிவகுமார் (வடசென்னை)   2. K.S. பாஸ்கர் (வடசென்னை)
3. V. ருக்குமாங்கதன் (தென் சென்னை)   4.M.L. கான் (தென்சென்னை)
5. G. தயாளன் (மத்திய சென்னை)   6. A. ராஜேந்திரன் (மத்திய சென்னை)
7. B.N. சிவாஜி பாண்டியன் (கடலூர்)   8. G. சிவாஜி அப்பூ (கடலூர்)
9. A. சுப்பையா (புதுக்கோட்டை)   10. பி. பாண்டித்துரை (தேனி)
11. பி. அன்பழகன் (வேலூர் கிழக்கு)   12. R. மாரிக்கனி (மதுரை)
13. டி. தணிக்காசலம் (காஞ்சிபுரம் கிழக்கு)   14. பொ. சிதம்பரராஜன் (இராமநாதபுரம்)
15. பி. சின்னசாமி (கிருஷ்ணகிரி)   16. C. குபேந்திரன் (கிருஷ்ணகிரி)
17. R ராஜசேகர் (தஞ்சாவூர் தெற்கு)   18. V. எல்லப்பன் (வேலூர் கிழக்கு)
19. V.A. பழனியப்பன் (திருவள்ளூர்)   20. E. லாலா சங்கரன் (கோவை நகர்)
21. N.S. கிருஷ்ணன் (திருவள்ளூர்)   22. R. நாகராஜன் (புதுச்சேரி)
23. K. பாபு (கோவை நகர்)   24. R. வெங்கடேசன் (மதுரை நகர்)
25. A. மோகன் (மதுரை புறநகர்)   26. S. சிவாஜி முத்துக்குமார் (குட்டம், நெல்லை)
27. V. ஜெயச்சந்திரன் (சேலம்)   28. T.S. பிரசாத் (கன்யாகுமரி)
29. P. சிவகுமார் பிரபு (திருப்பூர்)   30. K. குரு (திருச்சி நகர்)
31.V. ஏழுமலை (புதுச்சேரி)   32. A. அரசு (திருவண்ணாமலை)
33. S.M. சுப்புராஜ் (விருதுநகர்)   34. S. சுப்ரமணியம், M.A., M.Ed. (விருதுநகர்)
35. C.K. குமார் (திண்டுக்கல் மேற்கு)   36. C.G. ராஜசேகரன் (தஞ்சாவூர் மேற்கு)
37. D. ஜெயபால் (திருவண்ணாமலை)   38. M. மார்ட்டின் ஜேம்ஸ் (கன்யாகுமரி)
39. P. சோமசுந்தரம் (காரைக்கால்)   40. R. ராஜேந்தர் (வேலூர் மேற்கு)
41. S.P. ராமமூர்த்தி (மும்பாய்)    
     
மாநில பேச்சாளர்கள்
     
1. வேங்கை சந்திரசேகர் (திருச்சி)   2. T. ஐயம்பெருமாள் (கும்பகோணம்)
     
 
 
உலக அளவில் நடிகர் திலகத்தின் சிறப்பையும் புகழையும் பரப்புவதில் ஓரங்கமாக வலைத்தளங்களுக்கான முக்கியத்துவம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

ஆம் அகில இந்திய சிவாஜி மன்றத்தின் வலைத்தளப் பொறுப்பாளர்களாக முரளி சாரும் அடியேனும் நியமிக்கப்பட்டுள்ளதையும் மகிழ்வுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

முரளி சாரின் எழுத்து வன்மை, அவருக்குள் இருக்கும் நடிகர் திலகத்தின் பக்தி யாவும் உரிய முறையில் இன்று அங்கீகாரம் பெற்றுள்ளன. இந்தப் பணியில் அவரை விட சிறந்தவர் இருக்க முடியாது. அவருக்கு நம் அனைவரின் சார்பிலும் என் சார்பிலும் உளமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறுகிறேன்.

இன்னுமோர் மட்டற்ற மகிழ்ச்சியான செய்தி, நம்முடைய நடிகர் திலகம் இணைய தளம், www.nadigarthilagam.com, Official website for Sivaji Ganesan என்ற வகையில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

எல்லாப்புகழும் நடிகர் திலகத்திற்கே.